2021ல் நிகழ்ந்தேறிய இயற்கை அனர்த்தங்கள்

  1. அமெரிக்க புயல்: இடா சூறாவளி கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்காலத்தில் அமெரிக்க கிழக்கு கடற்கரையை தாக்கியது. இது அமெரிக்க கண்டத்தை தாக்கிய வலிமையான சூறாவளியாக பதிவு செய்யப்பட்டது
  2. கிரீஸை சூறையாடிய காட்டுத் தீ: கிரீஸ் நாட்டை காட்டுத் தீ சூறையாடியதால் அந்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது.காட்டு தீ காரணமாக இயற்கை காடுகளின் ஒரு பெரிய பகுதி அழிக்கப்பட்டது. உயிரிழப்புகளும் பதிவாகி, பலர் காயமடைந்தனர்.
  3. இத்தாலி தீ: தெற்கு இத்தாலியில் வெப்ப காற்றினால் தூண்டப்பட்ட தீயால் தெற்கு கலாப்ரியாவுடன் சிசிலி நகரமும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீப்பிடித்தது.
  4. ஜெர்மனி வெள்ளம்: 60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், ஜெர்மனியின் பல தாழ்வான நகரங்கள் மற்றும் பகுதிகள் மிகவும் அழிவுகரமான வெள்ளத்தை பார்த்தன. 
  5. கனடியன் ஹீட்வேவ்: ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர்.
Spread the love