பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறிய சிட்சிபாஸ் மற்றும் மெட்வடேவ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் மைக்கேல் யெமர் ஆகியோர் மோதினர். இதில் 6-2, 6-2, 6-1, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் 4 வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் டென்னிஸ் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள டேனில் மெட்வடேவ் மற்றும் மியோமிர் கெக்மனோவிச்சை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வடேவ் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Spread the love