பிக் பாஸ் “அல்டிமேட் தொடரில்” இவ்வாரம் வைல்டு கார்டுக்குள் நுழைப்போகும் அந்த பிரபலம் இவரா..?

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்கிறது. அந்தத்தொடரிலிருந்து நடிகை வனிதா நேற்று திடீரென வெளியேற்றியது தொடரின் பரபரப்பை இன்னும் அதிகரிக்கவைத்துள்ளது

முக்கியமாக மறுபுறம் தொகுப்பாளர் சகலகலாவல்லவன் கமலஹாசனுக்குப்பதில் இவ்வாரத்திலிருந்து நடிகர் சிலம்பரசன் எனப்படும் சிம்பு பதில் தொகுப்பாளராக வர போகிறார் என்பதும் பிக்பாஸ் ஆதரவாளர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது எனலாம்.

இந்நிலையில் தற்போது இந்த வார இறுதியில் ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார் என்பது அதிகூடிய மகிழ்வுச்செய்தி அந்த பிரபலம் யார் என்கிற எதிர்பார்ப்பைத்தீர்க்கும் முகமாக விஜய் டிவி KPY புகழ் சதீஷ் தான் வைல்டு கார்டு போட்டியாளராக வருகிறார் என்கிற தகவல் இரசிகர்களிடையே பரவி வருகிறது.
மற்ற போட்டியாளர்கள் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்கள் என்ற நிலையில் இவர் மட்டும் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் என்பது கூடுதல் தகவலாகவுள்ளது .

பிரபல விஜய் டிவியின்மூலம் பிரபலமான  அவராவது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை பரபரப்பாக்குவாரா.? என்பதை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க..அதற்கான விடையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பிக் பாஸ் ரசிகர்கள் பலர் ஓவியா தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவாரோ என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது கிடைத்த இத்தகவலானது ஓவியா ரசிகர்களுக்கு ஏமாற்றமானதாக  இருந்தது என்றால் மிகையில்லை.

Spread the love