மனமும் உடலும் நலமோடு இருக்க 40 நிமிடங்கள் போதுமானதே.. சித்தர்கள் சொல்லும் பாடம்..

நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் நோயில்லா நெறிமுறையை வகுத்து வைத்துள்ளனர். குறிப்பாக சித்த மருத்துவத்தில் எண்ணற்ற வழிமுறைகளைப்பற்றி திருமூலர் சித்தர் கூறியுள்ளார்.

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”.

என்று உடம்பை வளர்க்கும் வழி முறைகளை கூறியுள்ளார்.

நம் உடல் மூன்று வகைப்படும். 1. சூக்கும் உடல் (ஆன்ம உடல்) 2.காரண உடல் (மன உடல்) 3. ஸ்தூல உடல் (பருவுடம்பு) இதில் நாம் மன உடல், பருவுடல் இரண்டையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் இந்த இரண்டில் எதில் பாதிப்பு நிகழ்ந்தாலும் பருவுடலை பாதித்து நோய்களை உண்டாக்கி ஆயுளை குறைக்கும்.

அதற்கான சிறிய எளிய அனைவரும் செய்யக்கூடிய பயிற்சி உள்ளன. இதனை செய்வதற்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

  1. சூரிய நமஸ்காரம் (தளர்வு பயிற்சி) – 5 நிமிடம்
  2. சித்தர் ஆசனங்கள் – 4 (பத்மாசனம், வஜ்ராசனம், தடாசனம், புஜங்காசனம்) – 10நிமிடம்
  3. சித்தர் வர்மங்கள் – 4 (திலர்த வர்மம், தும்மி காலம், அடப்பகாலம், விலங்கு வர்மம்) – 5 நிமிடம்
  4. சித்தர் முத்திரை – 4 (லிங்க முத்திரை, பிராண முத்திரை, சூரிய முத்திரை) – 5 நிமிடம்
  5. சித்தர் திருமூலர் மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) – 10 நிமிடம்
  6. சவாசனம் – (நனவு நிலை உறக்கம்) – 5 நிமிடம்

நாம் நோயில்லா வாழவும், உளப்பிணி, உடல் பிணி இல்லாமல் வாழவும் இந்த பயிற்சிகள் சிறந்த முறையில்உதவும்.

Spread the love