முதல் நாள் வெளியீட்டிலேயே அதிரடி வசூலை குவித்தது “வலிமை”

நடிகர் அஜித் குமாரின் புதிய வெளியீடான “வலிமை” திரைப்படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்களிலும் வெளியாகி இருந்தது. திரைப் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்தில் திழைத்தனர். காரணம் படம் அவர்கள் ரசிப்பது போல் அமைந்திருந்தே ஆகும்.

முன்கூட்டிய
டிக்கெட் புக்கிங் தொடர்ந்து முழுநேர ஹவுஸ் புல்லாகவே இருந்து வருகிறது விநியோகஸ்தர்கள் எல்லோருமே சந்தோஷத்தில் உள்ளார்கள். படம் வெளியிடப்பட்டபோது ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வசூல் பற்றி தான்

அந்த வகையில் சென்னையில் படம் திரையிடப்பட்ட முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் மட்டும் திரைப்படம் வெளியாகி ரூ. 1.82 கோடி வசூலைக்குவித்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் இத்திரைப்படமானது சிறந்த ஓர் மைல் கல்லாக அமைந்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

Spread the love