பப்பாளி விதையில் இவ்வளவு ஆச்சரியமூட்டும் நன்மைகளா ?

பப்பாளி மரத்தில் பழம் இலை, பப்பாளி விதை என பல நன்மை தரும் விஷயங்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதன் விதைகளில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் 2 டீஸ்பூன் பப்பாளி விதையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி சாப்பிடுவதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பப்பாளி விதை மற்றும் தேனில் உள்ள சக்தி வாய்ந்த அமிலங்கள் மற்றும் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெயியேற்றி உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது. வயிற்றில் உள்ள புழுக்கள் நமது செரிமான செயலை பாதிக்கிறது. பப்பாளி மற்றும் தேனில் உள்ள அமிலங்கள் புழுக்களை கொன்று செரிமானத்தை சீர் செய்கிறது. பப்பாளி விதை, தேன் கலந்த கலவையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.

தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையை தொடர்ந்த சாப்பிட்டு வந்தால் நமது உடலின் சதைகளை ஒழுங்கு செய்து அழகான கட்டுக்கோப்பான உடலை பெற உதவுகிறது. தேன் மற்றும் பப்பாளி விதை கலந்த கலவையில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள சோர்வுடன் போராடி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. பப்பாளி விதை மற்றும் தேன் கலந்த கலவையில் சில வகை என்சைம்கள் உள்ளன. அவை ஆண்களின் விந்து எண்ணிக்கையை அதிகரித்து ஆண்மைக் குறைவு பிரச்சனை ஏற்டாமல் தடுக்கிறது.

Spread the love