உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம், கூட்டாக அறிக்கை வெளியிட்டது.

ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் ஏற்படுத்தப்பட்ட உக்ரைன் மீதான கட்டவிழத்த வன்முறை ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்துடன் ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடுகளின் பிரதிநிதிகள் குழுவான (EU) பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதரகங்களுடனான உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்  

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினரின், அரசியல், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு பிரிவினரின் வழியால் அனுப்பிவைக்கப்பட்ட அந்த அறிக்கையில் பின்வருவன கூறப்படுகின்றன,

உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஐ.நா வில் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும். என்றும்,

ஐ.நா சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாட்டிற்கோ மாநிலத்தினுக்கோ அதனது பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலைச்செய்வதோ அல்லது தமது சக்தியைப் பிரயோகிப்பதையோ அச்சாசனத்தின் பிரிவுகள் தடைசெய்கின்றன. அத்துடன் இந்த உக்ரைந் மீதான தாக்குதலானது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கு முரணானதும் எவ் வழியாகிலும். இந்த இராணுவ நடவடிக்கையானது மோதலை அமைதியான முறையில் தீர்க்க முடியாது போனதற்கும் மாற்றீடான இராஜதந்திர முயற்சிகளுக்கு கடுமையான அடியாகும்.

தற்போதைய மோதல்களுக்கு அரசியல் தீர்வு காண நாம் பல வருடங்களாக முயற்சித்து வருகிறோம். நேட்டோ-ரஷ்யா சபைகளுக்கான மன்றத்தில் பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கான  அழைப்புகளை ரஷ்யா ஏற்காததற்குமாக  நாங்கள் வருந்துகிறோம்.

உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா மதிக்காதது மட்டுமல்ல அதனது செயற்பாடுகளை புறக்கணிப்பதோடு அதன் இருப்புக்கான உரிமையை வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்குகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் உட்பட உலகெங்கிலும் நாங்கள் ஒன்றுபட்டு நிற்பதோடு ஒன்றியத்தின்  விதிகளைப்பின்பற்றியதோடில்லாமல் சர்வதேச கட்டுக்கோப்பிற்கு இது ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி

உலகளவில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக அமைந்தது இந்த உக்ரேன் ரஷ்ய முறுகல் நிலை இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக முடிவுக்ககொண்டுவருமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை வைக்குமாறு சர்வதேச சமூகத்தை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

இந்த பிரகடனத்தில் சொல்லப்பட்டனவான சுதந்திரத்தை அங்கீகரிக்காத நிகழ்வின் நிரலினையும் ரஷ்யாவின் சட்ட விரோதமான முடிவை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும், மற்ற நாடுகளை சாசனங்களில் சொல்லப்பட்டவற்றை செய்வதிலிருந்து விலகுநடக்கும் பட்சத்தில்  ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறது. மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், உக்ரைனின் தனது எல்லைகளை மீறாத தன்மையைக்காகவும், வெளிப்புறத்திலிருந்துஎந்த வற்புறுத்தலின்றி அதன் சொந்த முடிவுகளை எடுக்கும் உரிமைக்காகவும் நாம் துணை. நிற்க வேண்டும்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரேனானது தனது சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றினை மீறாத அசைக்க முடியாத  அதன் கட்டுக்கோப்பு காரணமாக எமது ஒன்றியத்தின்  பலமான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உக்ரைனுக்குக் கொடுப்பதாக நம்பிக்கையுடன் வலியுறுத்துகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love