“உக்ரைன் – ரஷ்ய யுத்தத்திற்கு அமெரிக்காவே மூல காரணம்”

உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு அமெரிக்காவே ‘மூலகாரணம்’ என குற்றம் சாட்டியது வடகொரியா! அமெரிக்காவின் நாட்டாமையால் வந்த விளைவே இது என்றது வடகொரியா.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக வட கொரியா கூறும் முதற்கருத்தாக இதுவெளிவந்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆய்வாளரின் அறிக்கையை வெளியிட்டு வைத்து அதன்மேல் தனது நிலைப்பாட்டை சூசகமாக ஏற்றிக்கூறி நிற்கிறது.

தனது நாட்டின் பாதுகாப்பிற்கான ரஷ்யாவின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து மட்டுமல்ல ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்தது அமெரிக்காவே, எனவே ஐரோப்பிய நெருக்கடியின் “மூலகாரணம்”  அமெரிக்காவே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா பற்றிக்கூற விளையும் போது அது”ரஷ்யாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து இராணுவ மேலாதிக்கத்தை கடைபிடித்துள்ளது” என்று சர்வதேச அரசியல் ஆய்வுக்கான சொசைட்டியின் ஆராய்ச்சியாளர் ரி ஜி சாங் என்பவர் வாஷிங்டனை குறைகூறியுள்ளார்.

இன்று உக்ரேனை இவ்விதமான இராணுவ நெருக்கடிக்குள் கொண்டு போனதன் மூலகாரணம் அமெரிக்காவின் தலையீடும், அதீதமான மத்தியஸ்தும் தான்’ என்று வட கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை” என்பவற்றைத்தக்க வைத்துக்கொள்ளல் என்ற போர்வையைப்போட்டு  மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, “இரட்டை நிலைப்பாட்டை” வைத்திருந்ததாக  அமெரிக்காவை ரி ஜி சாங் கடுமையாக சாடினார். 

வடகொரியாவின் இந்த எகத்தாளமான கருத்துக்கு மிகப் பாரிய  அளவில் அமெரிக்கா எந்த எதிர்வினையையும் அது காட்டாது  என்றும் கூறப்படுகிறது. காரணம், இது பற்றி அமெரிக்க பெரிதாகப்பார்ப்பதோ அலட்டிக்கொள்ளவோ அதிமுக்கியத்துவக்கருத்தாக எடுத்துக்கொள்ளமாட்டாது என்றும் இக்கருத்தின் முக்கியத்துவம் மிகக்குறைந்தளவே அதன் பார்வையில் இருக்கும் என்றும் பேசப்பட்டது

ரஷ்ய அதிபர் “புடினின் போரானது  தற்போது கிட்டத்தட்ட எல்லா புவிசார் அரசியலையும் வடிவமைக்கும் ஓர் முக்கிய புள்ளியாக பரிணமித்திருக்கிறது, உக்ரைனின் படைத்திறனைப் பெருக்கவும் ஆயுத பலத்தை விரிவு படுத்தவும், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், உடல் கவசம் மற்றும் சிறிய ஆயுதங்கள் மற்றும் யுத்தம் சார் உபகரணங்கள்  உட்பட உக்ரைனுக்கு கூடுதல் $350 மில்லியன் இராணுவ உதவியை அமெரிக்கா  அளிப்பதாக உக்ரைனுக்கு அது உறுதியளித்தது. 

ரஷ்ய முப்படைகளாலும் முற்றுகையிடப்பட்ட நாட்டிற்கு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை தந்துதவுவதாகவும், ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கான  வான்வெளியை மூடுவதாகவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை கூட்டாக இணைந்து உலகளாவிய ரீதியில் “தேர்ந்தெடுக்கப்பட்ட” ரஷ்ய வங்கிகளை (SWIFT) அனைத்துலக  நிதிச் செய்தியிடல் அமைப்பிலிருந்து தடுக்க ஒப்புக்கொண்டுள்ளன,

உக்ரைன்மீது போரை எதற்காக ஆரம்பித்தோம் என்பது  தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது இறுதியான முடிவுகளையோ திட்ட வரைபுகள் பற்றியோ   எந்தவித  வெளிப்படுத்தலிலும் ஈடுபடவில்லை  ஆனால் மேற்கத்திய நாடுகளின் கணிப்புப்படி, ரஷ்யாவானது தனது நாட்டை விரிவுபடுத்துவதாகவே  போர் தொடுத்திருக்கும் திட்டத்தில் இருக்கிறது, அத்துடன் ரஷ்யா ஐரோப்பாவின் வரைபடத்தை மீண்டும் மாற்றியமைத்து, மாஸ்கோவின் பனிப்போர் கால செல்வாக்கை மீண்டும் புதுப்பிக்கும் என்பதே ஐரோப்பிய நாடுகளின் எண்ணமாக இருக்கிறது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்போர் இதுவாகும். இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 198 பேர் கொல்லப்பட்டதாகவும் 1,000 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் சுகாதார அமைச்சர் (2022, பிப்ரவரி 26, சனிக்கிழமை) தெரிவித்தார்.

Spread the love