உக்ரைனில் பள்ளி மீது ராட்சத ஏவுகணை தாக்குதல் – 400 பேரின் கதி என்ன?

ரஷ்ய உக்ரைன் போரானது உக்கிரைனை பாரிய அழிவின் எல்லைக்கே இழுத்துக்கொண்டு போய்விட்டுள்ளது . பலநூறு வருடமானாலும் மீளாத அழிவின் நரகத்துக்கே உக்ரைனைக்கொண்டு போய் விட்டது இக்கொடும்போர், இவ்வேளை உக்ரைனின் முக்கிய நகரான மரியுபோல் அழிவின் உச்சத்துக்கே தள்ளப்பட்டது, அதன் இன்னொரு கொடுமுடிதான் அந்த நகரின் ஏவுகணைத்தாக்குதலும் பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்த மக்களின் அழிவுமாகும்.

உக்ரைனில் மரியபோல் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. அசோவ் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. தற்போது நகரின் நான்கு பக்கங்களில் இருந்தும் தாக்குதல் தொடுத்தபடியே ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகின்றனர். மரியபோல் நகரில் ரஷ்ய ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருவதாகவும், இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

மரியபோல் நகரில் ரஷ்ய ராணுவம் இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் பள்ளி ஒன்று இடிந்து நொறுங்கியது. போரினால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகள் நடைபெற சாத்தியமில்லை எனவும்
தற்போது இந்த இடம் தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்துள்ளது எனவும் இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் தாக்குதல் நடைபெற்றது. 

உருக்குலைந்த பள்ளி கட்டடத்தின் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இதுவரை 130 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.ஆனாலும் இவர்களை தவிர்த்து மீதம் உள்ள 270 பேரை இடிபாடுகளுக்கு இடையே தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யா ஹைப்பர்சோனிக் வகையிலுள்ள ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.

கிங்சோல் ” எனப்படும் இந்த ராட்சத ஏவுகணைகளால் தான் தற்போது உக்ரைன் தாக்கப்பட்டு  கடும் சேதங்களுக்கு உள்ளாகி   வருகின்றது. உக்ரைனை சுற்றி இருக்கும் கருங்கடல், அசோவ் கடல், காஸ்பியன் கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்க் கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணைகள் மூலம் மரியு போல் என்னும்  துறைமுக நகரம் அழித்தொழிக்கப் பட்டுக்கொண்டுருக்கிறது .

ரஷ்யா –  உக்ரைன் இடையில் போர் மூண்ட காலப்பகுதியிலிருந்து இன்றுவரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை 1200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாககணக்கிடப்பட்டு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் போர் முடிந்து அதனது உக்கிரம் தணிந்த பின்பே  உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Spread the love