சீனாவில் பயங்கரம்! விமானம் வீழ்ந்து நொருங்கியது

சுமார் 133 பயணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக , தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் சீனாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் பிரதேசத்தில் ஈஸ்டர்ன் போயிங் 737 எனப்படும் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது இதனால் அம்மலை பகுதியில் பெரும் தீ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குவாங்சூவிலிருந்து குன்மிங்கிற்கு சென்று கொண்டிருந்த MU5736 என்ற விமானம், மதியம் 13.11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் மாலை 15.05 மணிக்கு தரையிறங்குவதாக கணக்கிடப்பட்டிருந்தது. அதேநேரம் தென் மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்நாட்டு தொலைக்காட்சியான CCTV செய்தி வெளியிட்டது.

போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதால், விமானம் விழுந்து நொங்கிய  மலைப்பகுதியில் தீயானது மூண்டுள்ளதாகவும், மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டில், போயிங் 737 மேக்ஸ் (Max) விமானங்களை இயக்கும் லயன் ஏர் விமானத்தின் 610 என்ற விமானம் விபத்துக்குள்ளானதும் அத்துடன் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் மற்றொரு 737 மேக்ஸ் விமானம் 2019 ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கதாகும், அந்த இரு விமான விபத்து சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து போயிங் 737 MAX பயணிகள் விமானங்கள் யாவும் அதற்கென உத்தரவு பெற்ற நிறுவனங்களால்  திரும்ப பெறப்பட்டன.

இருப்பினும், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இவ் விமானம் வழக்கமான போயிங் 737-89P விமானம் ஆகும்.   இது  மேக்ஸ் வகையை சேர்ந்தது அல்ல எனவும் கூறப்பட்டது. இன்று விபத்திற்குள்ளான விமானம், 6 ஆண்டுகள் பழமையானது என விமான கண்காணிப்பு இணையத்தளமான ஃப்ளைட் ராடார் 24  வழங்கிய தரவுகள் கூறி நிற்கின்றன.

Spread the love