அமெரிக்காவில் நிகழ்ந்த இயற்கையின் அசாதாரண நிகழ்வு

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி, அமெரிக்காவின் தென் பகுதியில், வானில் ஏற்பட்ட மின்னலானது, அனைவரும் வியக்கத்தக்க அபூர்வ நிகழ்வாகப் பதிவாகியுள்ளதாக, ஐ.நா சபை தெரிவித்தது. இந்த மிகப்பெரிய மின்னல் அமெரிக்காவின் மிஸிஸிபி , லூசியானா டெக்சர்ஸ் மாகாணமென, மொத்தமாக 770 கிலோ மீற்றர் தூரத்திற்குத் தென்பட்டதாக, உலக வானிலை அமைப்பு சுட்டிக்காட்டியது.


கடந்த 2018இல் ஒக்ரோபர் 31 ஆம் திகதி தெற்கு பிரேசிலில் பதிவான மின்னலை விடவும், கூடுதலாக 60 கிலோ மீற்றர் பயணம் செய்ததாகவும், அதிகாரிகள் கூறினர். அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள் இயற்கையின் அசாதாரண பதிவுகளிலொன்று எனவும், அவர்கள் குறிப்பிட்டனர்.

https://www.foxweather.com/weather-news/us-lightning-bolt-stretching-across-3-states-sets-world-record-for-longest-flash

Spread the love