இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் தற்போதைய நிலை

இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் மாதம் 22.1 வீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது, 2022 ஜனவரியில் 25 சதவீதமாக அதிகரித்ததுள்ளது.

அதேவேளை 2021 டிசம்பரில் 7.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜனவரியில் 9.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது. அதன்படி, உணவு வகைக்குள் உள்ளடங்கியுள்ள அரிசி, புதிய பழங்கள், பால் மா மற்றும் பாண் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து, வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள் ஆகியவற்றில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கல்வித்துறை சார்ந்த உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான பாடநெறி கட்டண அதிகரிப்பு, உணவகம் மற்றும் விடுதி துறை சார்ந்த துணைப் பிரிவுகள் சார்ந்த உணவு அல்லாத பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

Spread the love