T-20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரி-20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ரி-20 ஆட்டத்தில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்ற இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மதிப்பீடு புள்ளிகளை (269) ஒரே மாதிரியாக பெற்ற போதிலும் ஒட்டுமொத்த புள்ளிகள் கணக்கில் இந்திய அணி 10,484 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து 10,474 புள்ளிகளை பெற்று 2 ஆம் இடத்தில் உள்ளது.

https://www.icc-cricket.com/rankings/mens/team-rankings/t20i

Spread the love