LPL லை மீண்டும் கைப்பற்றிய Jaffna kings

காலி கிளாடியேட்டர் அணிக்கும் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில், ஜஃப்னா கிங்ஸ் அணி. 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அதன்படி, 2020 போன்று. 2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜப்னா கிங்ஸ் அணி நேற்றுக் கைப்பற்றியது.

இந்த இறுதிப் போட்டி, அம்பாந்தோட்டையில் நேற்றிரவு 7.30க்கு ஆரம்பமானது  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்த ஜஃப்னா கிங்ஸ் அணி 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணி சார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் காலி கிளாடியேட்டர் அணியின் சமித் பெடெல் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி கிளாடி யேட்டர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. அணிசார்பில் அதிகப்படியாக தனுஸ்க குணதிலக்க 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜப்னா கிங்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட் டுக்களையும், சதுரங்க டி சில்வா 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மோதிய அதே இரண்டு அணிகள்தான் இந்தாண்டும் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. இதன்படி, ஜப்னா கிங்ஸ் இரண்டாவது முறையாகவும் லங்கா பிரிமியர் லீக் தொடரைக் கைப்பற்றியுள்ளது.



Spread the love