இலங்கையெங்கும் 2022 இல் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்!

2022 இல் நாட்டில் உணவுக்குப் பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ள நிலையில், விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்கவும் இந்த விடயத்தை உறுதிசெய்துள்ளார்.

எனினும், அவ்வாறு பஞ்சம் ஏற்படச் சாத்தியமில்லை என்று தற்பாதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார். “நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படத்தான் போகின்றது. எனவே, பஞ்சத்திலிருந்து மீள்வதற்கு ஒரே வழி, அனைவுரும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதே” என்று அமைச்சர் மஹிந்த அமர வீர அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, நாட்டில் உணவுப் பொருள்களுக்கு பெரும் பஞ்சம் ஏற்படவுள்ளது. அந்த நிலைமையை எதிர்கொள்ளக்கூடிய முன்னேற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களும் அதற்கேற்ப சிந்தித்துச் செயற்பட வேண்டும். உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தற்போதே தயாராக வேண்டும்” என்று. விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்கவும் சுட்டிக்காட்டியள்ளார். இந்தநிலையில், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளே இவ்வாறான பொய்யான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். 25 மாவட்டங்களிலுள்ள விவசாய அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வும் செய்தேன். உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படும் என்றபோதிலும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது” என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

Spread the love