தகுமா? இது தகுமா? அமைச்சர் டக்ளசை கேட்கிறது தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

இந்திய படகுகளை முட்டி மூழ்கடியுங்கள் என்று சொல்லி இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் இலங்கை மீன்வளத்துறை டக்லஸ் தேவனந்தா அவர்களை தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சிங்கள அரசின் துணையோடு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கடந்த 17/12/2021 வெள்ளிக்கிழமை இலங்கைக்கான சீன தூதரை இந்திய கடல் எல்லைக்கு இலங்கை கடற்படை கப்பல் மூலம் அழைத்து வந்து இந்திய கடல் எல்லை பகுதிகளை டிரோன் விமானம் மூலம் படமெடுத்து கொடுத்து இந்திய எல்லைப்பகுதியை குறித்த விபரங்களை சீன தூதருக்கு கொடுத்துள்ளார். மேலும் சீன தூதர் மூலம் மன்னார் மீனவர்களுக்கு 1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை கொடுத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்களை தூண்டி விடும் வேலையை செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் சீன தூதரின் தூண்டுதல் பேரில் 18,19,20 தேதிகளில் 10 இந்திய மீன்பிடி விசைபடகுகள் மற்றும் 68 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது ஆதரவாளர்கள் முலம் இலங்கை மீனவர்களை தூண்டி விட்டு போராடவைத்து அந்த கூட்டத்தில் இந்திய மீன்பிடி விசைப்படகுகளை அரசுடைமை ஆக்கி அதை இலங்கை மீனவர்களுக்கு கொடுக்கிறேன். அதை வைத்து இந்திய படகுகளை முட்டி மோதி மூழ்கடியுங்கள் என்பது போன்று கூறியுள்ளார். இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டின் அமைச்சராக பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று இந்திய இலங்கை மீனவர்களிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்படுவதை இந்திய இலங்கை அரசுகள் கண்டிக்கவேண்டும். டக்லஸ் தேவானந்த அவர்களின் இந்த செயலை இந்திய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் வண்மையாக கண்டிக்கின்றோம். என்றும் கூறப்பட்டது

Spread the love