தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி- டி சில்வா,அஞ்சலிக்கா சம்பியன்

106 ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் யசித்த டி சில்வா சம்பியனாகியதுடன் பெண்கள் பிரிவில் அஞ்சலிக்கா குரேரா சம்பியன் பட்டத்தை வென்றார். இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் அண்மையில் கொழும்பு டென்னிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டித் தொடரின் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் ரூணடிளி சாத்துர்ய நிலவீரவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடியிருந்த யசித்த டி சில்வா 2க்கு 0 என்ற சுற்றுகள் கணக்கில் (7-6 (3) 6-4) வென்று சம்பியனானார். இதேவேளை பெண்களுக்கான தனிநபர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்ற அஞ்சலிக்கா குரேரா, ஜனலி மனம்பெரியை 2க்கு 0 என்ற சுற்றுகள் கணக்கில் (6-3, 6-2) வீழ்த்தியிருந்தார்.

Spread the love