FIFA விருது பட்டியலில் லியோனல் மெசி முன்னிலை

2022 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் சர்வதேச கால் பந்தாட்ட சம்மேளனத்தின் FIFA விருதிற்கான வீரர்கள் பட்டியலில் லியோனல் மெசி (Lionel Messi ) முன்னிலை பெற்றுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனை மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருது வழங்கும் விழா எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டிற்கான உல கின் சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியலில் ஆர்ஜென்டினாவின் Julián Alvarez, பிரான்ஸின் Karim Benzema பிரான்ஸின் Kylian Mbappé குரோஷியாவின் Luka Modrié ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Spread the love