2022 பீபா விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் தின் (பீபா) 2022 ஆம் ஆண்டுக்கான, உலகின் மிகச் சிறந்த வீரர், மிகச் சிறந்த வீராங்கனை, பயிற்றுநர்கள், மற்றும் இரசிகருக்கான விருதுகளுக்கு பரிந்துரைப்பட்டவர்களின் பட்டியலை பீபா வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் இதற்காக தமது வாக்குகளை அளிக்கலாம்.

மிகச் சிறந்த வீரர், மிகச் சிறந்த வீராங்கனை, மிகச் சிறந்த ஆண், பெண் கோல் காப்பாளர்கள், பயிற்றுநர்கள், வருடத்தில் மிக அழகான கோல் புகுத்தியமைக்கான புஸ்காஸ் விருதுக்குரியவர். மிகச் சிறந்த ரசிகர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மிகச் சிறந்த வீரருக்கான பட்டியலில் ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸி, பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே, பிரேஸிலின் நெய்மார், மொரோக்கோவின் அச்ரப் ஹக்கீமி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந் துரைப் பட்டியலில், 2021 ஆம் ஆண்டு பீபா சிறந்த வீராங்கனை விருது. 2021,2022 ஆம் ஆண்டுகளின் மகளிர் பெலோன் டிஓர் விருதுகளை வென்ற ஸ்பானிய வீராங்கனை அலெக்ஸியா புட்டேலெஸ்,கடந்த வருடம் மகளிர் யூரோ கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் தலைவிலியா வில்லியம்சன்,அச்சுற்றுப் போட்டியில் அதிக கோல்களை (6) புகுத்திய வீராங்கனைகளான இங்கிலாந்தின் பெத் மீட், ஜேர்மனியின் அலெக்ஸாண்ட்ரா பொப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வருடத்தில் மிக அழகான கோல் புகுத்தியமைக்கான புஸ்காஸ் விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் எம்பாப்பே, பிரேஸிலின் ரிச்சார்லிசன், மரியோ பலோடெலி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ரசிகர்கள், தேசிய கால்பந்தாட்ட அணித்தலைவர்கள், பயிற்றுநர்கள், தெரிவுசெய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர்கள் ஆகியோரின் வாக்குகள் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பீபாவின் FIFA.com இணையத்தளத்தில் பெப்ரவரி 3 ஆம் திகதி நள்ளிரவு வரை வாக்குகளை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் விபரம் பெப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்.

Spread the love