பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல்

இவ்வருடத்திற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71 ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ்யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022 இன் பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மொத்தம் 86இற்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா 2 ஆவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமிபெனா 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love