44 பில்லியன் டொலருக்கு கைமாறுகிறது ட்விட்டர் – திட்டத்துக்கு இயக்குனர் சபை ஒப்புதல்

ட்விட்டர் சமுக ஊடாக வலைத்தளத்தை டெல்ஸா அமைப்பின் தலைமை செயலதிகாரி எலான் மஸ்சிற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, ட்விட்டர் பணியாளர்களுடன் காணொலி மூலம் கடந்த வாரம் பேசிய எலான் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்தும் எண்ணத்தைக் கைவிடவில்லை எனவும் அதற்குத் தடையாக பல பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறினார். அந்தப் பிரச்சினைகளில் ஒன்றாக தனது கையகப்படுத்தல் திட்டத்துக்கு ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளிக்காததையும் மஸ்க் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையிலேயே எலான் மஸ்க்சுக்கு 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ட்விட்டரை விற்பனை செய்ய ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை கைமாற்றும் ஒப்பந்தம் எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனத்திடையே கடந்த ஏப்ரலில் கையெழுத்திடப்பட்டது. ஆனார் ட்விட்டரில் எத்தனை போலி கணக்குகள் உள்ளன? என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் திடீரென அறிவித்தார். ட்விட்டரில் 20 முதல் 50 வீதம் போலிக் கணக்குகள் இருப்பதாகவும் அந்தக் கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ட்விட்டர் தலைமை நிறைவேற்று அதிகாரி பராக அகர்வால், மொத்த ட்விட்டர் பயன்பாட்டாளர்களில் 5 வீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எலான் மஸ்க், அவரை அவமானம் செய்யும் வகையிலான குறியீட்டை ட்விட்டரில் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love