நீண்ட எரிபொருள் வரிசைகளை குறைக்க நடைமுறைக்கு வரும் புதிய யோசனை

இறுதி இலக்கங்களுக்கு அமைய   எரிபொருள்

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த நடைமுறை பின்பற்ற வேண்டும் எனவும் ஆலோசனை வெளியிடப்படுள்ளது, 

இதன்படி, இலக்க தகட்டில்

  • 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை
  • 3, 4,5, 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை
  • 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு புதன்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை

மேற்குறித்த நடைமுறையின் படி எரிபொருளை வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த நடைமுறை ஆரம்பமாகும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Spread the love