123 நாட்களுக்க பின் காலிமுகத்திடல் போராட்டம் முடிவுக்கு வந்தது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். போராட்ட களத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஆனால் போராட்டம் ஓயவில்லை என்றும், எதிர்காலத்தில் முழு இலங்கை மக்களுடன் புதிய முகத்துடன் புதிய ஆற்றலுடன் முன்வருவோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அண்மித்த பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மார்ச் 31 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தமை கோட்டா கோ கமவுக்கு பாரிய வெற்றியாக அமைந்தது.
அதன் பின்னர் கோட்டா கோ கம செயற்பாடுகளில் இருந்தும் பலரும் விலகுவதாக அறிவித்து வந்தனர்.

எனினும் கடந்த 123 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து நேற்று புதன் கிழமை முதல் முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். நாட்டில் மே 9, ஜூன் 9, ஜூலை 9 ஆகிய திகதிகளில் கொழும்பு காலிமுகத்தி டல் பகுதியில் இடம்பெற்ற * சம்பவங்கள் தேசிய அரசிய Sலில் பாரிய மாற்றங்கள் நிகழ் 5 வதற்கான வாய்ப்புகளை உருவாக்கின. மே 9 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அத்துடன் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. எனினும் மக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக ஜூன் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது.

அதேபோல ஜூலை 9 ஆம் திகதியும் பாரிய மக்கள் அலை அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பன முற்றுகையிடப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (அப்போதைய பிரதமர்) தனிப்பட்ட இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பிரதிபலனாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் நாட்டை விட்டும் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love