சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் ஒத்திகையில் தைவான்

தைவான் இராணுவம் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போர் ஒத்திகையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மிக விரைவில் போர் ஏற்படும் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


தைபே, தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.


இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனால் கோபமடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது.


இந்தநிலையில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை ஆரம்பித்துள்ளது. போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும் பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Spread the love