வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோகல் பெயார் (Glocal Fair) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருந்ததுடன் அவற்றுக்காக பண விரைவு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது ஆரம்பித்துள்ள வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றங்கள் இல்லை. மாறாக அது எமது மக்களுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் வேலைவாய்ப்பை பெற்று பல இலட்சங்களைச் சம்பாதிக்கக்கூடியவாறு ஜனாதிபதியின் வழிகாட்டலில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இங்குள்ள இளைஞர், யுவதிகள் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் போது புலம்பெயர் மனநிலையுடன் செல்லக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளேன். இதேவேளை அவரும் அவரது அதிகாரிகளும் தமிழர்களுடைய தேசிய உடையில் வருகை தந்திருப்பதும் ஜனாதிபதியின் மன எண்ணத்தையும் செயற்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love