ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டை மறுக்கும் வட கொரியா

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை வட கொரியா வன்மையாக மறுத்துள்ளது.  அவ்வாறான எந்த திட்டமும் இல்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வட கொரியா ரஷ்யாவிற்கு ஏராளமான பீரங்கிக் குண்டுகளை இரகசியமாக வழங்கியுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் ஊடாக ஆயுத விநியோகத்தை வட கொரியா கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த விடயங்கள் வதந்திகள் என வட கொரிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.

Spread the love