இத்தாலி பால்கன் தீபகற்பத்தில் நிலநடுக்கம்!

இத்தாலியில்  5.5  மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  மத்திய இத்தாலியின் பல பகுதிகளிலும் பால்கன் தீபகற்பத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

அட்ரியாடிக் கடற்கரையில் வீடுகள் பல நொடிகள் குலுங்கியுள்ளன. சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ள போதும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.  நிலநடுக்கம் காரணமாக மத்திய மார்ச்சே பிராந்தியத்தின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தண்டவாளத்தில் சேதங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனும் சந்தேகத்தில் அன்கோனா நகரைச் சுற்றி ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேற்கில் ரோம் மற்றும் வடகிழக்கில் போலோக்னா (Bologna) மற்றும் ஸ்லோவேனியா, குரோஷியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலும் (Herzegovina)நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பல சிறிய அளவிலான அதிர்வுகளையடுத்து, முதலாவது வலுவான நிலநடுக்கம்  06:07 GMT மணியளவில் ஏற்பட்டுள்ளது.  

Spread the love