மைக்ரோசொப்ட் டீம்ஸ் (Microsoft teams) மென்பொருளில் கோளாறு

மைக்ரோசொப்ட் டீம்ஸ் (Microsoft teams) மென்பொருளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மைக்ரோசொப்டை மேற்கோள் காட்டி, மென்பொருளை அணுக முடியாமல் பயனர்கள் தற்போது புகார்களைப் அளிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்து வருவதாகக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே சுமார் 4800 புகார்களைப் பெற்றுள்ளதாகவும், எத்தனை பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை மைக்ரோசொப்ட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love