மெக்சிகோ ஓபன் டெனிஸ் சம்பியன் வென்றார் நடால்

பிரிட்டன் வீரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மெக்சிகோவின் அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார். மெக்சிகோவின் அகபல்கோவில் ADB டென்னிஸ் தொடர் நடைபெற்றது.


நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரிட்டனின் கேமரான் நோரியை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-4, 6-4 என வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார். பிரிட்டனைச் சேர்ந்த நோரி, கடந்த வாரம் டெல்ரே பீச் கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love