ஜூடோ சம்மேளன தலைவர் பதவி புடினிடமிருந்து பறிப்பு

உக்ரேய்ன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அளிக்கப்பட்டுள்ள சர்வதேச ஜூடோ சம்மேளனத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சம்மேளனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரேய்னில் தற்போது நடை பெற்று வரும் போர் காரணமாக, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு வழங்கப்பட்டிருந்த தலைவர் பட்டம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூடோ தற்காப்பு விளையாட்டில் மிகவும் ஆர்வமுடைய புடின், கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கின் அந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love