மணிப்பூர் தேர்தல் – குண்டு வெடிப்பால் அச்சத்தில் மக்கள்

இந்தியாவின் இம்பாலில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமம் லம்லய் சட்டசபை தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள், காங்கிரஸ், பாஜக, அதவாலே கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சுயேச்சை ஆகியோர் போட்டியிடுகிறார்கள் 60 சட்டசபைத்  தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் இன்றும் (28)  மார்ச் மாதம் 6 ஆம் திகதியும்   2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முன்தினம் (26/02/2022) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில், சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலேயே  இக்குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குண்டுவெடிப்பில்  குழந்தையொன்று  உட்பட 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love