நாடளாவிய ரீதியில் மின்வெட்டு

இன்று (02) பகல் வேளையில் 5 மணித்தியால மின்வெட்டும் இரவு வேளையில் இரண்டரை மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, E, T, U, V, W வலயங்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும் F, P, Q, R, S வலயங்களில் நண்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. E, T, U, V, W வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் F, P, Q, R, S வலயங்களுக்கு இரவு 8.30 முதல் 11 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அதிக கேள்வி நிலவும் இரவு வேளைகளில், தேவை ஏற்படின் திட்டமிடப்படாத வகையில் 30 நிமிட மின்துண்டிப்பு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Spread the love