வில்லனாகும் பிரேம்ஜி


கடந்த பல வருடங்களாக பிரேம்ஜி நகைச்சுவை நடிகராக மட்டுமே நடித்து வருகிறார் குணச்சித்திர வேடத்தில் கூட அவர் நடித்ததில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 என்ற படத்தின் வில்லனாக பிரேம்ஜி நடிக்க இருப்பதாகவும் இருப்பினும் நகைச்சுவை கலந்த வில்லன் என்பதால் இந்த படத்தில் அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் அனுதீப் தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஆரம்பிக்கும் போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் மட்டுமே உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு மொழிகளில் படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதனால் தமிழ் மொழிக்கு மட்டுமே வில்லனாக பிரேம்ஜி நடிக்கிறாராம். மற்ற மொழிகளுக்கு எல்லாம் அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளதாம் படக்குழு.

Spread the love