பொருளாதார தடைகளின் எதிரொலி, ரஷ்யாவில் இறுக்கமாகும் உணவுக் கட்டுப்பாடு 

பல்வேறு பொருளாதாரத்தடைகளின் எதிரொலியினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளகாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பெப்ரவரிமாதம் 24 ஆம் திகதி முதல் பயங்கரமானதாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியள்ளன. உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இவ்வாறு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாசார தடையால் ரஷ்யா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் மற்றும் வான்வெளித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளமையினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love