புதிய பட்ஜெட்டில் மேலும் பல வரிகள், அரச ஊழியர் சம்பளத்துக்கு 1.1 டிரில்லியன் ரூபா தேவை

இந்த வருடம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருக்கும் 800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பாரிய நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் நிவாரணத் திட்டங்களுக்கான செலவை ஈடுகட்ட, அடுத்த 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மேலும் வரிகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சமூகப் பாதுகாப்பிற்காக 466 மில்லியன் ரூபா, நலன்புரி உதவிக்காக 124 மில்லியன் ரூபா, கல்விக்கான நலத்திட்டங்களுக்கு 16 மில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபா ஆகியவை இதில் அடங்கும். அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 1.1 டிரில்லியன் ரூபா செலவிட வேண்டியிருக்கும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1000 கோடி ரூபாவுக்கு மேல் வசூலிக்கும் என திறைசேரி எதிர்பார்க்கிறது. புதிதாக உயர்த்தப்பட்ட வரிகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு 1 டிரில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சுங்கம், கலால் திணைக்களம் மற்றும் முதலீட்டுச் சபை ஆகியவற்றிலிருந்தும் கூடுதலான வரி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

Spread the love