பிரீமியர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் அணி வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – பிரைட்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 0-0 என சமநிலையில் இருந்தது.


தொடர்ந்து இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 51 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தில் 90 வது நிமிடம் முடிந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் மான்செஸ்டர் அணியின் பர்னோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார் இதனால் 2-0 என மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.

Spread the love