படமாகும் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை

புகழ் பெற்ற பிரபல அமெரிக்க பொப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், வேகமான நடன அசைவுகளாலும் இனிய குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். பாடல் எழுதுவது, இசையமைப்பது, அதற்கேற்ப நடனம் ஆடுவது என்று பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்ந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். சமூக சேவையிலும் ஈடுபட்டார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை ஆனார்.

2009இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையை படமாக்க ஒரு வருடமாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தை போஹெமியன் ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது சகோ தரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாபர் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் கிரஹாம் கிங் தெரிவித்
துள்ளார்.

Spread the love