டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற டைடன் நீர்மூழ்கியின் சிதைவுகள் மீட்பு

1912 ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற 5 பேரை ஏற்றிச் சென்ற டைடன் நீர்மூழ்கிக் கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பயணத்தை ஏற்பாடு செய்த Oceangate நிறுவனத்தின் தலைவர் ஸ்டொக்டன் ரஷ் (61) பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், 58, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஷதா தாவூத் (48), அவரது 19 வயது மகன் (19), மற்றும் மூத்த ஆய்வாளர் போல் ஹென்றி (77) ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், டைடன் கப்பலின் சில சிதைவுகள் நேற்று மீட்கப்பட்டதை அமெரிக்க கடலோர காவல்படை உறுதிப்படுத்தியது. இந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டன.

இன்று (29) சிதைவுகளை பரிசோதித்த போது மனித உடல் உறுப்புகள் என ஊகிக்கக்கூடியவை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Spread the love