டெஸ்ட் தரவரிசையில் ஜடேஜாவுக்கு முதலிடம்

ஐ.சி.சி.யின் அண்மைய டெஸ்ட் கிரிக்கெட்டின் சகல துறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார். மொஹாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியீட்டியமைக்கு ரவீந்திர ஜடேஜாவின் செயல்திறன் முக்கிய பங்காற்றியது. இதனால் அவர் பட்டியலில் முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையுடனான போட்டி யில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்களை எடுத்தார் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு எதிரான இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பங்காற்றினார். இதன் மூலம் பட்டியலில் முதலிடத்திலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டனை பின்னுக்கு தள்ளி 402 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் ஜடேஜா. சகலதுறை வீரர் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். 

Spread the love