உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ முன்வந்த பிரிட்டன் டென்னிஸ் வீரர்

ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு தான் விளையாடிப் பெறும் பரிசுத்தொகைகள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே.

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் 14 வது நாளை எட்டியுள்ளது. பெப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பான UNHCR தெரிவித்துள்ளது. இதனிடையே, முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, இந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் தான் வெற்றி பெறும் பரிசுத்தொகையை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில் கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

https://mobile.twitter.com/andy_murray/status/1501229314208980994
Spread the love