‘செஸ்’ உலகச் சம்பியனை வென்ற சிறுவன்

செஸ் உலகச் சம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, சென்னையைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்துள்ளார். இணையம் வழியாக ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலேயே பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை வென்றுள்ளார்.

இந்தப் போட்டியின் 8ஆவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான பிரக்ஞானந்தா, நோர்வே நாட்டைச் சேர்ந்த செஸ் உலகச் சம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கறுப்பு நிறக்காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39ஆவது நகர்த்தலின் போது மேக்னஸ் கார்ல்சனை வெற்றிகொண்டார். மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வெல்வது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுக்கள் உள்ளன.

Spread the love