மக்கள் சீனம்: மூத்த குடிமக்களுக்கென ஐந்தாண்டுத் திட்டம்!

மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க புதிதாக ஐந்தாண்டுத் திட்டத்தை மக்கள் சீனம் உருவாக்கியிருக்கிறது. “நாட்டு வளர்ச்சிக்கான திட்டமிடல்” என்கின்ற கருதுகோளினை தொடர்ந்தும் சீனா கடைப்பிடித்து வருகிறது.

அதாவது ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டு நடைமுறப்படுத்தி அது நிறைவடையும் நேரத்தில் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் சீன அரசு மீளாய்வு செய்கிறது.

அந்த ஆய்வின் அடிப்படையில் மீண்டும் அடுத்த கட்ட நகர்விற்கான பணிகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாப்போல நிதியையும் ஒதுக்கீடு செய்து வைத்து விடுகிறது, தற்போது அதன் முதற்கட்டமான 2021-25ஆம் ஆண்டுகளுக்கான திட்டத்தை மக்கள் சீனம் நடைமுறைப்படுத்தும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு சீனத்தின் வளர்ச்சியில் அதன் பாதையில் புதிய சில திட்டங்களுக்கு கூட்டிச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அதாவது பெருந்தொற்றின்போது மூத்த குடிமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானதோடு மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். இதைக் கருத்தினிலும் கணக்கிலும் கொண்டு மூத்த குடிமக்களின் உடல்நலனைப் பேணுவதற்கான புதிய திட்டத்தை ஐந்தாண்டுத் திட்டமாக நிறைவேற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளது.

பெருந்தொற்று, மற்றும் பல்வேறு வகையானா நோய்கள், ஆகியவற்றிலிருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாப்பது தமது முதற்கடனாகக் கொண்டதுடன் வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாடு என்ற அடிப்படையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் வகை யிலும் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது மக்கள் சீனம்.

அதனடிப்படையில் தற்போது மூத்த குடிமக்களுக்கு உள்ள மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது, சிகிச்சைகளை மேம்படுத்துவது, மற்றும் புதுமையான முறையில் சேவை ஆகியவற்றை வழங்குவது, என்பதீறாக அதனை குறித்த இலக்குகளாக இத் திட்டத்தினை பிரித்து வைத்துக்  கொண்டுள்ளது. 

இவற்றில் முக்கிய அம்சங்களாக அடங்குகின்றவை மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதிகள், தனியான மருத்துவ மையங்கள், மற்றும் செவிலியர் எண்ணிக்கை அதிகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தினை நிறைவேற்ற ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரமும் முன்னேற்றப்பட வேண்டிய அவசியம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள சீன அரசு, ஐந்தாண்டுத் திட்டத்தின் பலனாக மனித உழைப்பு நேரம் அதிகமாகும், என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் கணக்குப்படி, சீன மக்கள் தொகையில் 60 வயதிற்கு மேற் பட்டோர் 18.7 சதவிகிதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love