சீனா, இந்தியாவை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இணையுமாறு ஜப்பான் கோரிக்கை

இலங்கைக்கு கடன் வழங்கிய சீனா, இந்தியா போன்ற நாடுகளை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இணையுமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் இன்று (02) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஜப்பானிய நிதி அமைச்சர் சுனிச்சி சுசுகி இந்த கோரிக்கையை விடுத்தார்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பின்னர் ஜப்பான் இதனை அறிவித்துள்ளது.

இலங்கைக்கு தொடர்பான கடன் வசதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த அடிப்படை நிபந்தனையாக, பிரதான கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கையை எட்டுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் கடனை செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Spread the love