இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற A குழுவுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மந்தகதியில் ஓவர்களை வீசியதால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தலா 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்ததால் ரோஹித் ஷர்மாவின் இந்திய அணிக்கும் பாபர் அஸாமின் பாகிஸ்தான் அணிக்கும் எமிரேட்ஸ் ஐசிசி சிறப்பு மத்தியஸ்த குழுவின் போட்டி மத்தியஸ்தர் ஜெவ் குறோவினால் அபராதம் விதிக்கப்பட்டது.


வீரர்கள் மற்றும் வீரர்களின் உதவியாளர்களுக்கான ICC ஒழுக்க விதிகளின் 2.22 ஷரத்தின் பிரகாரம் இரண்டு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் தலா 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணித் தலைவர்களும் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை .

Spread the love