எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு 

எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (02) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என  தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு  தெரிவித்துள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் கரையோரங்களில் உள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக குறுகிய காலத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love