ஐ.எம்.எப். உதவி; சீனா ஆதரவு

சர்வதேச நாணய நிதியத்தின்(I.M.F) நெருங்கிய நண்பர், அண்டை நாடு மற்றும் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கை  தொடர்பில் தாம் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்வீட் மூலம் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சிரமத்திலிருந்து மீள, கடன் நிவாரணம் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதில் இலங்கையின் பதிலளிப்புக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக சீன தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Spread the love