சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கி​ழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த மாதம் எட்டாம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும் குறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 4,664 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை இந்த மாதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு கொள்கலன்களின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எடை கொண்ட கொள்கலன்களின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love