சீன- ரஸ்ய உறவை சீர்குலைக்க அமெரிக்கா கடும் முயற்சி

ரஷ்யாவுக்கு உதவுவ வேண்டாம் என சீனாவுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போரானது உக்ரேனில் பாரிய அழிவுகளையும், உலகெங்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியையைத் தோற்றுவித்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்காவும் ,பிரித்தானியா மற்றும் மேற்கு நாடுகள் பலவும் இணைந்து பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்த வேளையில் இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச் (Yang Jiechi) யை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைவன் (Jake Sullivan), ரஷ்யாவுக்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அத்துடன் பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவிக்கரம் நீட்டினாலோ மற்றும் பல்வேறு வகைகளில் உதவி செய்தாலோ உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Spread the love