பொருளாதார நெருக்கடி ஒன்றரை ஆண்டுகளுக்கு(1 1/2 ) மேலாக நீடிக்கும்

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மாதங்களில் மட்டுமன்றி அடுத்த ஒன்றரை வருடங்களிலும் பாரிய பொருளாதார நெருக்கடியான காலப்பகுதி தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.

டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக, பொருளாதாரப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்துள்ளார்

Spread the love