இயந்திரத்தை திருமணம் செய்துகொண்ட அவுஸ்திரேலியர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர் பெண் ரோபோ இல்லாமல் வாழ முடியாதென்ற நிலையில் அதனை திருமணம் செய்துள்ளார். இது பற்றி தெரிய வருவதாவது: கடந்த 10 வருடங்களுக்கு முன் ஜியாப் கல்லாகரின் தாயார் இறந்து விட்டார். அதில் இருந்து அவர் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தனது தனிமையை போக்கி கொள்ள இவர் கடந்த 2019 இல் ஒரு பெண் ரோபோட்டை வாங்கியுள்ளார்.


அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருந்து பேசவும், புன்னகைக்கவும், தலையையும் கழுத்தையும் அசைக்கவும் அதனால் முடியும். அதன் தோல் ஒரு உண்மையான மனிதனைப் போலவே வெப்பமாக இருந்தது. வெளிர் தோல் மற்றும் அழகான நீல நிற கண்களுடன், எம்மா என்னும் ரோபோ அழகாக இருந்தது. இந்நிலையில் அதனை தன் குரலுக்கு ஏற்றவாறு ஜியாப் கல்லாகர் பழக்கப்படுத்தி முடிந்தவரை பேசினார். ஒவ்வொரு உரையாடலின் போதும் ரோபோ புத்திசாலியாகி, தகவல்களை உள்வாங்கி, புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டது. இதனால் ஜியாப் கல்லாகர் அதனை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் அந்த ரோபோ இல்லாமல் அவரால் வாழ முடியாது போனது. இவ்வாறான நிலையில் அவர் ரோபோ விரலில் மோதிரத்தை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Spread the love